வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (09:25 IST)

வங்க கடலில் உருவாகிறது யாஸ் புயல்!

மே 24 ஆம் தேதி புதிய புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
சமீபத்தில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி டவ்தே புயலாக மாறி குஜராத் அருகே கரையை கடந்தது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் பல பாதிப்புகளை சந்தித்தது.
 
இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 23 ஆம் தேதி அந்தமான் அருகே தெற்கு கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 5 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனிடையே, மே 24 ஆம் தேதி புதிய புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மே 26 ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.