திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 25 மார்ச் 2020 (21:58 IST)

சுங்கக் கட்டணம் வசூலிப்பது ரத்து : மத்திய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு !

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் ரத்து : மத்திய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு !

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பொருளாதாரம் திணறிக்கொண்டிருந்த நிலையில்,  சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்கள், தொழிலாளர்கள், ஏற்றுமதி இறக்குமதி எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தொழிலாளர்கள், சிறு, பெரு நிறுவனங்களைச் சேர்ந்த அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்கள் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையில் சில சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகிறது.

இந்த நிலையில், கொரோனா எதிரொலியால் இன்றுமுதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.