1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:10 IST)

இந்தியாவில் 6 மாதத்தில் 1.32 கோடி கணக்குகள் முடக்கம்! – வாட்ஸப் செயலி தகவல்!

இந்தியாவில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 1.32 கோடி வாட்ஸப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸப் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக சமூக வலைதளங்கள் போலி மற்றும் சர்ச்சைக்குரிய கணக்குகளை முடக்குவது மற்றும் நீக்குவதன் பட்டியலை அரசிடம் மாதம்தோறும் சமர்பித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் நீக்கப்பட்ட கணக்குகள் விவரத்தை வாட்ஸப் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் மட்டும் புகார் தெரிவிக்கப்பட்ட கணக்குகள் மீதான நடவடிக்கை, போலி கணக்குகள் என 20 லட்சம் கணக்குகளை நீக்கியுள்ளதாக வாட்ஸப் தெரிவித்துள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்து 6 மாதமாகியுள்ள நிலையில் இதுவரை 1.32 கோடிக்கும் அதிகமான கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸப் தெரிவித்துள்ளது.