செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (08:31 IST)

ப்ரீபெய்டு திட்டங்களை 30 நாட்களாக அறிவிக்க வேண்டும்! – ட்ராய் உத்தரவு!

மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் 30 நாட்கள் கொண்ட ப்ரீபெய்டு திட்டத்தை வழங்க வேண்டும் என ட்ராய் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. இவற்றின் மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்கள் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டவையாக இருந்து வருகின்றன.

இதனால் ஒரு வருடத்தில் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதை சுட்டிக்காட்டியுள்ள ட்ராய், பயனாளர்களுக்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ளான்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.