1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 நவம்பர் 2018 (11:29 IST)

வாயிலே வெடித்த பட்டாசு: பரிதாபமாய் உயிரிழந்த 7 வயது சிறுவன்

மகாராஷ்டிராவில் சிறுவனின் வாயிலே பட்டாசு வெடித்ததில் அவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தீபாவளி தொடங்கவிருப்பதால் குழந்தைகள் குஷியில் ஆழ்ந்துள்ளனர். சில வாண்டுகள் இப்பொழுதே தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
 
அப்படி மகாராஷ்டிரா மாநில புல்தானா மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் ஜாலியாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தான். அவன் பற்றவைத்த பட்டாசு வெடிக்காததால், சிறுவன் அந்த பட்டாசை எடுத்து அதன் திரியை வாயால் கடித்துள்ளான்.
 
அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயமடைந்தான். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.