1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (16:45 IST)

மாஸ்க் இல்லனா 500 ரூபாய் ஃபைன்!

ரயில் நிலையங்களில் பின்பற்றப்படும் கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ரயில் நிலையங்களில் பின்பற்றப்படும் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. 
 
இதில் ரயில் நிலையங்களிலும், ரயில்வே வளாகத்திலும், ரயில்களிலும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.