1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (13:31 IST)

டெங்குவை தடுக்கும் ஜப்பானின் தடுப்பூசி! – இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டம்!

இந்தியாவில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் தடுப்பூசியை கொண்டு வர பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் டெங்குவை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் டெங்குவிற்கு ஜப்பானின் டெகேடா நிறுவனம் தடுப்பூசியை தயாரித்துள்ளது. டக் 003 என்னும் இந்த தடுப்பூசி டெங்குவிற்கு எதிராக 64% திறனுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.