10 நாட்களில் கேரளாவில் கொரோனா குறையும்: சாத்தியமா?
அடுத்த 10 நாட்களில் கேரளாவில் கொரோனா பரவல் மிகவும் குறைந்து விடும் சுகாதாரத்துறை மந்திரி வீனாஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 41,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,28,10,845 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் இன்று 30,203 பேருக்கு கொரொனா தொற்று தாக்கியுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,687 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 115 என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 10 நாட்களில் கேரளாவில் கொரோனா பரவல் மிகவும் குறைந்து விடும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீனாஜார்ஜ் தெரிவித்துள்ளார்.