தொடர்புடைய செய்திகள்
- 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி - மத்திய அரசின் 1 வருட டார்கெட்!
- இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி! – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
- நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசியா?? ஹர்ஷவர்தன் மறுப்பு!!
- இந்தியாவில் ஒரே நாளில் 1.08 கோடி பேருக்கு தடுப்பூசி
- லடாக்கில் உலகிலேயே உயரமான சாலை திறப்பு!
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் எது தெரியுமா?
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஹிமாச்சல பிரதேசம் பெறுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல் கல்லாக ஒரேநாளில் 1.08 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 64,05,28,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், தகுதி உடைய இளைஞர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோசாவது செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தகுதி உடைய இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஹிமாச்சல பிரதேசம் பெறுகிறது.
