திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (20:08 IST)

ஆந்திராவில் இன்றைய கொரோனா!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 
 
ஆந்திராவில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,321 என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 14,853 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,67,497 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கொரோனாவால் மொத்த பலி 13,807, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,81,906 அறிவிக்கப்பட்டுள்ளது.