80 வயது இயக்குனர் படத்தில் டி காப்ரியோ… வெளியான புகைப்படம்!
நடிகர் லியனார்டோ டி காப்ரியோ நடித்து வரும் கில்லர்ஸ் ஆஃப் ப்ளவர் மூன் திரைப்படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவரான லியனார்டோ டி காப்ரியோ இப்போது மார்ட்டின் ஸ்கார்சசி இயக்கும் கில்லர்ஸ் ஆப் ப்ளவர் மூன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் ஆறாவது படம் இதுவாகும். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் படப்பிடுப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது.