வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (07:14 IST)

அசோக் செல்வன் நடித்த சபாநாயகன் படத்தின் ரிலீஸில் கடைசி நேர மாற்றம்!

தமிழ் சினிமாவில் சூதுகவ்வும் திரைப்படம் மூலமாக கவனம் பெற்றவர் அசோக் செல்வன். அதன் பின்னர் அவர் பல படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, மன்மத லீலை மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகிய படங்கள் கவனத்தை ஈர்த்தன.

ஆனாலும் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் போராடி வந்த அவருக்கு இந்த ஆண்டு ரிலீஸான போர்த்தொழில் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தது. இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள சபா நாயகன் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ‘சபா நாயகன்’. மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை உள்ளிட்டவர்கள் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. காதல் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதை டீசர் மற்றும் டிரைலர் கோடிட்டு காட்டியது.

டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸை டிசம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். டிசம்பர் 15 ஆம் தேதி அதிகளவிலான படங்கள் ரிலீஸ் ஆவதால் இந்த படத்தை தள்ளிவைத்துள்ளதாக தெரிகிறது.