திங்கள், 19 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (13:38 IST)

கார்த்தி நடிக்கும் படத்துக்காக கேரளாவில் இருந்து அழைத்துவரப்பட்ட யானை!

கார்த்தி நடிக்கும் படத்துக்காக கேரளாவில் இருந்து அழைத்துவரப்பட்ட யானை!
96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குனர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில்  உருவாகும் உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார் கார்த்தி.  இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியலான ஈரமான ரோஜாவே நாயகி ஸ்வாதிதான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்காக கேரளாவில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று யானை ஒன்று காரைக்குடிக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. இந்த யானையோடு கால்நடை மருத்துவர் மற்றும் யானை பாகன்கள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டு பாதுகாப்பாக இப்போது ஷூட்டிங் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.