திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (08:01 IST)

மனிதநேயத்திற்கு பூட்டு போடாதீர்கள்: வீட்டின் உரிமையாளர்களுக்கு ஒரிசா வேண்டுகோள்

மனிதநேயத்திற்கு பூட்டு போடாதீர்கள்
இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்கள் நர்சுகள் ஆகியோர் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் நர்சுகளை குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வீட்டின் உரிமையாளர்கள் வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும்போது அவர்களுக்கு நோய் தாக்கியிருந்தால் அந்த நோய் மற்றவர்களுக்கும் தாக்கும் என்ற அச்சமே வீட்டின் உரிமையாளர்களுக்கு உள்ளது 
 
சமீபத்தில் கூட எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிலரை வீட்டை காலி செய்ய ஒரு வீட்டின் உரிமையாளர்கள் நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவே இது குறித்து எச்சரிக்கை செய்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ஒரிசா மாநிலத்தில் இரண்டு நர்ஸ்கள் தங்கியிருந்த வீட்டை அந்த வீட்டின் உரிமையாளர் வலுக்கட்டாயமாக காலி செய்யச் சொன்னதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ‘மனிதநேயத்திற்கு போடாதீர்கள் என்றும் தன்னலம் கருதாது நோயாளிகளுக்காக இரவு பகலாக உழைக்கும் நர்சுகளை வீட்டைவிட்டு வெளியேற்ற சொல்வது மனிதத் தன்மை இல்லாதது என்றும் கூறியுள்ள ஒரிசா மாநில அரசு, இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால் வீட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது