1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (17:22 IST)

கொரோனா எதிரொலி: பத்ம விருதுகள் விழா ஒத்திவைப்பு!!

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற இருந்த பத்ம விருதுகள் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
உலகளவில் 123 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,500 ஆக உயர்ந்துள்ளதாகவும், 5000 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேலும், கொரோனா தொற்றுக்கு இரண்டு பேர் பலியாகியுள்ளார். 
 
கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் 2020 இந்த மாதத்தில் இருந்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும்படும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது ஜனாதிபதி மாளிகையில் நடைபெற இருந்த பத்ம விருதுகள் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா எதிரொலியால் ஜனாதிபதி மாளிகையில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற இருந்த பத்ம விருதுகள் விழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.