புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (08:54 IST)

மது அருந்துபவர்களுக்கு கொரோனாவால் ஆபத்தா?

மது அருந்துபவர்களுக்கு கொரோனாவால் ஆபத்தா?
கொரோனா வைரஸ் ஒரு தோற்று நோய் என்பதால் மிக எளிதில் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது புகைபிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களுக்கு மிக எளிதில் கொரோனா என்ற ஒரு வதந்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ஒரு சில நாட்களுக்கு முன்னர் மது அருந்தினால் கொரோனா வைரஸ் பரவாது என்ற வதந்தி பரவியது என்பதும் இந்த வதந்தியால் ஈரான் நாட்டில் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்து சிலர் மரணம் அடைந்தார்கள் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது அப்படியே எதிர்ப்பதமாக மது அருந்துபவர்களை கொரோனா வைரஸ் மிக எளிதில் தாக்கும் என்றும் அதே போல் புகை பிடிப்பவர்களை எளிதில் தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
 
ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஒரு பக்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் நிலையில் மது அருந்தினால் கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்று வெளியான வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் மது அருந்துபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு எளிதில் கொரோனா வைரஸ் தாக்கும் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது