வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 ஜனவரி 2023 (12:21 IST)

மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து: ஜனவரி 26 முதல் அறிமுகம்!

nose
இந்தியாவில் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து ஜனவரி 26 முதல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 
 
தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடக் தலைவர் கிருஷ்ணா என்பவர் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசியபோது ’உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து குடியரசு ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 
மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து மத்திய அரசுக்கு ரூபாய் 325 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தனியார் தடுப்பூசி மையங்களுக்கு ரூபாய் 800 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் கால்நடைகளை பாதிக்கும் பெரியம்மை நோய்க்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார் 
 
Edited by Siva