திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (10:14 IST)

ஜனவரி 26ல் கிராம சபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!

Grahma
வரும் ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தில் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். 
 
அன்றைய தினத்தில் கிராம சபை கூடி அந்தந்த கிராமத்திற்கு தேவையான வசதிகள் குறித்த கோரிக்கைகள் எழுப்பப்பட்டு அரசு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva