1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 22 ஜனவரி 2023 (09:42 IST)

ஜனவரி 26 வருகிறதா தளபதி 67 பட அப்டேட்?

விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது.

இப்போது முக்கியமான சில ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். அதன் பிறகு காஷ்மீரில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் அப்டேட் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டைட்டிலோ அல்லது ப்ரமோஷன் வீடியொவோ வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.