வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (12:41 IST)

இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல எங்களுக்கு சான்ஸ் இருக்கு… ஏன் தெரியுமா? – ஜோ ரூட் சொல்லும் காரணம்!

இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது.

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. இதனால் இந்த ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை தொடரை எப்படியாவது வெல்ல ஆர்வமுடன் இருக்கிறது. அதற்காக அணித் தயாரிப்பை இப்போது இருந்தே மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் “இந்த முறை உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பதால் எங்களுக்கு வாய்ப்பு அதிகம். ஏனென்றால் இந்திய மைதானங்கள் எங்களுக்கு மிகவும் பழக்கமானவை. எங்கள் வீரர்கள் இங்கு நிறைய விளையாடி அனுபவம் பெற்றுள்ளனர். இந்தியாவோடு உலகக்கோப்பைக்கு முன்னர் எங்களுக்கு தொடர் இருப்பதால் அதைப் பொறுத்து ஆடும் லெவனை முடிவு செய்வோம்” எனக் கூறியுள்ளார்.