தொடர்புடைய செய்திகள்
- அரசு சொல்வதை கேட்டிருந்தால் கொரோனா பரவியிருக்காது! – எடப்பாடியார் வருத்தம்!
- கொரோனா பாதிப்பு : திருச்சியில் முதல் பலி!
- பாதி எரிந்த உடலை தூக்கிச் சென்ற உறவினர்கள்! கொரோனாவால் இறந்தவருக்கு இறுதிச் சடங்கு மறுப்பு!
- இந்தியாவில் 2 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: மகாராஷ்டிராவில் மட்டும் 72 ஆயிரம் பேர்!
- மோடியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப்: ஜி7 மாநாட்டிற்கு அழைப்பு!
2 லட்சத்தை தாண்டிய பாதிப்பு; 6 ஆயிரத்தை நெருங்கிய பலி – மாநிலவாரி நிலவரம்
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் பல மாநிலங்களில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,303 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 72,300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,465 பேர் பலியான நிலையில் 31,333 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 24,586 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 17,617 பேரும், டெல்லியில் 22,132 பேரும், ராஜஸ்தானில் 9,373 பேரும், மத்திய பிரதேசத்தில் 8,420 பேரும், உத்தர பிரதேசத்தில் 8,361 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
