செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (08:51 IST)

கொரோனா பாதிப்பு : திருச்சியில் முதல் பலி!

கொரோனா பாதிப்பால் திருச்சியில் 70 வயது பெண்மணி ஒருவர் இறந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. ஆனால் தமிழகத்தைப் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது ஒரு ஆறுதல் செய்தியாக உள்ளது.

தமிழகத்தில் முதலில் அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதிகளில் திருச்சியும் ஒன்று. ஆனால் இப்போது அங்கு பாதிப்பு வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் முதல்முதலாக திருச்சியில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண்மணி  கடந்த 27 ஆம் தேதி முதல் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.