ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 21 அக்டோபர் 2021 (18:45 IST)

சீனாவில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா: பள்ளிகள் மூடல்!

கடந்த 2020ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பரவியது என்பதும் இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கொரோனா வைரசால் பொருளாதாரம் சீரழிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் இயல்பு நிலை திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீரென கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆட்டம் கண்டு வருவதால் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சீனாவில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து ஐந்து நாட்களாக சீனாவில் உள்ள வடக்கு மாகாணங்களில் மிக அதிகமாக பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது