செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 31 மே 2021 (09:58 IST)

கொரோனா செயற்கையாக உருவானதற்கு ஆதாரம் இல்லை - முன்னாள் ஐசிஎம்ஆர் நிபுணர் !

கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்ல என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என முன்னாள் ஐசிஎம்ஆர் நிபுணர் தகவல். 

 
கொரோனா வைரஸ் சீனா தான் உருவாக்கியது என கூறப்பட்டு இதன் மீதான விவாதங்கள் நடைப்பெற்று வந்தது. இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.  
 
இதனிடையே, கொரோனா சீனாவில் இருந்து பரவியது குறித்த விசாரணையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தீவிரப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது போலவே ஜோ பைடன் 90 நாட்களில் கொரோனா வைரஸ் உருவானது எவ்வாறு என்பது குறித்த அறிக்கையை உளவு அமைப்புகள் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.  
 
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவிற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியது சீனா. இதனிடையே, கொரோனா செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று முன்னாள் ஐசிஎம்ஆர் நிபுணர் டாக்டர் ராமன் ஆர் கங்கேத்கர் தெரிவித்துள்ளார். 
 
கோவிட் -19 செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்லது விலங்குவழியாக பரவியது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி  இறுதியான முடிவுக்கு வர கூடுதல் சான்றுகள் தேவை என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, 
 
கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்லது விலங்குவழியாக பரவியது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி இறுதியான முடிவுக்கு வர கூடுதல் சான்றுகள் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.