1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona today updates in India today

ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு! – முடிவுக்கு வந்த கொரோனா?

India
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நீடித்து வந்தாலும் நீண்ட நாட்கள் கழித்து ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,44,938 ஆக உயர்ந்துள்ளது.


ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,980 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,93,409 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 22,549 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edited By: Prasanth.K
அடுத்த கட்டுரையில்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மாமனார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி வாழ்த்து!