புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (10:19 IST)

ப்ரின்ஸ் திரைப்பட விநியோகஸ்தருக்கு இத்தனை கோடி நஷ்டம் வருமா?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’  திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. ரிலீஸுக்கு முன்னதாக திடீரென இந்த திரைப்படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘பிரின்ஸ்’ திரைப் படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் நீளம் திடீரென 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த மாற்றமே படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைத்தது.

இந்நிலையில் படம் வெளியாகி பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனாலும் முதல்நாளில் இந்த படம் சுமார் 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி நாளான திங்கள் கிழமை இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. ஆனாலும் விடுமுறை நாட்களில் கூட இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை வாங்கிய அன்புச்செழியனுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.