1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 9 மே 2021 (13:01 IST)

கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்கும்? எச்சரிக்கும் வல்லுநர்கள்!

மூன்றாவது கொரோனா அலை தாக்குதலில் குழந்தைகள் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

 
முன்னதாக இரண்டாவது அலை தாக்குதலில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு காய்ச்சல், மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் தற்போது உள்ள கொரோனா பாதிப்பை கணக்கில் கொண்டு மேற்கொண்ட ஆய்வில், கொரோனா 2வது அலை ஜூலை மாதம் முடிவுக்கு வரும் எனவும் இதன் பின்னர் அக்டோபர் மாதம் 3வது அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என பின்னர் தான் கணித்து கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே, மூன்றாவது கொரோனா அலை, குழந்தைகளை அதிகம் தாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அதனை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தற்போதே தயாராக வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.