வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 9 மே 2021 (10:33 IST)

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 12 இடங்களில் சித்த மருத்துவ மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் 12 இடங்களில் சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று தமிழகத்தில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன. அந்த வகையில் தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில் ’கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி உள்ள நோயாளிகள் சித்த மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
சித்த மருத்துவ மையம் திறக்க உள்ள 12 இடங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.