திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Modified: புதன், 5 மே 2021 (20:26 IST)

கொரோனா 3வது அலை குழந்தைகளை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் வயதானவர்களையும் ஏற்கனவே நோயால் அவதிப்பட்டு இருந்தவர்களையும் தாக்கியது. தற்போது மிக வேகமாக பரவி வரும் இரண்டாவது அலை இளைஞர்களை குறிவைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் மிக அதிகமாக இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவதாகவும் உயிர் இழந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் மூன்றாவது அலை மிக விரைவில் இந்தியாவில் பரவும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று கூறப்படுவதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது 
 
குழந்தைகளுக்கு உடல் நலம் இல்லாமல் போனால் அவர்களுடன் மருத்துவமனைக்கு பெற்றோர்களும் செல்ல வேண்டியிருக்கும் என்றும் அதனால் பெற்றோருக்கும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இப்போது மூன்றாவது அலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது
 
மேலும் மூன்றாவது அலை வந்தால் அதை எப்படி கட்டுப்படுத்துவீர்கள் என்றும் மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்றும் ஆக்சிஜன் இல்லாவிட்டால் மாற்று திட்டம் என்ன என்றும் நீதிபதிகள்  குறித்த வழக்கு ஒன்றில் கேள்வி எழுப்பி உள்ளனர்