வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 5 மே 2021 (18:28 IST)

கொரோனா தடுப்பு: ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.50 கோடி நிதி உதவி

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கொரொனா இரண்டாம் கட்ட பரவலைத் தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், கொரொனா தடுப்புப் பணிக்காக பிரபல ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.50 கோடி நிதி உதவி வழங்குவதாகக் கூறியுள்ளது.

ஸ்டார் இந்திய நிறுவனம், விஜய் டிவி, ஸ்டார் போர்ட்ஸ், சூப்பர்  விஜய், டிஸ்னி ஹாட் ஸ்டார், நேசனல் ஜியாகரஃபி  உள்ளிட்ட 60 முன்னணி சேனல்களை உள்ளடக்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.