திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 5 மே 2021 (20:11 IST)

கேரளா மோசமான நிலையை நோக்கி செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்

கொரோனா வைரஸ் பாதிப்பில் கேரளா மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா பரவலில் கேரளா மோசமான நிலையை நோக்கி செல்வதாகவும் பாதிப்பு விகிதம் குறையவில்லை என்றும் இந்த சூழலில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுத்தது என்றும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 441,953 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இது கிட்டத்தட்ட தமிழகத்தின் பாதிப்பை விட இரு மடங்கிற்கும் மேல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கேரளாவில் இன்று ஒரே நாளில் 58 பேர் உயிரிழந்ததாகவும் 23,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கேரளாவில் கட்டுக்கடங்காமல் இரண்டாவது அலை வீசி வருவதை அடுத்து விரைவில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது