1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona frontline worker dance for corona patients

டான்ஸ் ஆடிய மருத்துவ பணியாளர்; கைதட்டி ரசித்த நோயாளி தாத்தா! – வைரல் வீடியோ!

National
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்காக மருத்துவ பணியாளர் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சமடைந்துள்ள நிலையில் நாள்தோறும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் பிஹிந்த் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்த மருத்துவ பணியாளர் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பிபிஇ கிட் உடையணிந்து மருத்துவ பணியாளர் ஆட வயதான நோயாளி தாத்தா அதை கை தட்டி ரசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இனப்படுகொலைக்கு சமமான சம்பவங்கள் நடக்கிறது! – உயர்நீதிமன்றம் வேதனை!