சொகுசுக் கப்பலில் பயணித்த 66 பேருக்கு கொரொனா!!
தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவில் இதுவரை கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மும்பை சொகுசுக் கப்பலில் பயணித்த சுமார் 66 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசுக் கப்பலில் மொத்தம் 2000 பேர் உள்ளதாகக் கூறப்படுகிறது, இந்தக் கப்பல் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.