திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (23:23 IST)

லட்சுமி கடாட்சம் பெற வழிகள் இவை..

பெண்கள் எப்போதும் தங்கள் இடது கையில் வெள்ளியாலான மோதிரத்தை அணிந்தால் பணவரவு அதிகரிக்கும். தினசரி குளிக்கும் முன்னர் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர தரித்திரம் நம்மை விட்டு விலகும். 
 
பசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்க வேண்டும். முடியாதவர்கள் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமாவது குளிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் வீட்டில் கோமியத்தை வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் தெளிக்க வேண்டும். இப்படி, தொடர்ந்து 45 நாட்கள்  விடாமல் செய்து வந்தால் தரித்திரம் விலகி வீட்டில் லட்சுமி தங்குவாள்.
 
வீட்டில் தூசி, ஒட்டடை சேரவிடக்கூடாது. வீட்டை இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து  வைக்கக்கூடாது.  இரவில் வீட்டைப் பெருக்கி குப்பையை வெளியே கொட்டக்கூடாது. இதுப்போன்ற சில எளிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும்;  திருமகள் நம்மை தேடி வருவாள். 
 
பாசிப் பருப்பை ஒரு பச்சைப் பையில் மூட்டையாக கட்டி உறங்கும்போது தலைக்கு கீழே வைத்து விட்டு பின்னர் மறுநாள் ஓடுகின்ற நீரில் விட வேண்டும். இப்படி செய்தால் நமது பணப் பிரச்சனையும் ஓடி விடும்.
 
குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேரதேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
 
லட்சுமியின் அருளால் உங்கள் வீட்டில் எல்லாச் செல்வமும் சேரும் என்கின்றன புராணங்கள். முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊறவைக்க வேண்டும்.  பின்னர் அதை அடுத்த நாளில் பறவைக்கோ அல்லது பசுவிற்கு உணவாக அளித்திட வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர பணத் தடை நீங்கி செல்வம்  அதிகரிக்கும்.