1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona crisis in India

19 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

National
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் விளைவாக உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,254 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,82,215ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,795ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 6 கட்ட ஊரடங்குகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் சில மாநிலங்களில் மட்டும் 7ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அயோத்தியில் ராமர் கோயில் – பிரதமருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!