செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (08:09 IST)

உலக கொரோனா எண்ணிக்கை 1.86 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.86 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலக அளவில் கொரோனாவால் 18,701,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1.19 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாகவும், உலக அளவில் கொரோனாவிற்கு 7.03 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது என்பதும், அதாவது அந்நாட்டில் மொத்தம் 4,918,420 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அந்நாட்டில் .60 லட்சம் பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிரேசிலில் 2,808,076 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 861,423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தென்னாப்பிரிக்காவில் 521,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மெக்சிகோவில் 449,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெருவில் 439,890பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலியில் 362,962 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 349,894 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,906,613 என்பதும், பலியானவர்களின் எண்ணிக்கை 39,820 என்பதும் குறிப்பிடத்தக்கது