1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK candidate I Periyasamy won in huge marigin

தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் இவர்தான்!

ஐ பெரியசாமி
தமிழக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தனிப் பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலேயே மிகப்பெரிய வெற்றியை திமுக வேட்பாளர் ஐ பெரியசாமி பெற்றுள்ளார்.

ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும்  பாமக வேட்பாளர் திலகபாமா 29,607 வாக்குகள் பெற்றனர். இதன் மூலம் 1,30,000 வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் ஐ பெரியசாமி பெற்றுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கொங்கு மண்டலத்தை கோட்டைவிட்ட திமுக; கடுப்பில் ட்ரெண்டாகும் #முட்டாள்கோவையனுங்க