1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 ஜூன் 2021 (11:13 IST)

கொரோனா 2வது அலையை போல மோசமானது அல்ல 3வது அலை?

கொரோனா மூன்றாம் அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என தகவல். 

 
ஆம், கொரோனா மூன்றாம் அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆகியவற்றின் அறிவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
இந்தியாவில் வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் வருங்காலங்களில் கொரோனா அலைகள் உண்டாவதை கட்டுப்படுத்த உதவும் என்று இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கி உள்ளதாக கூறும் இந்த ஆய்வு அதற்கு பல காரணங்கள் உள்ளது என்று தெரிவிக்கிறது.