வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (07:54 IST)

வந்து குவிந்த உதவிகள்: ஏழையின் வீட்டில் ரெய்ட் நடத்திய ஜெகன் மோகன் அரசு!

ஆந்திராவில் விவசாயி ஒருவருக்கு உதவிகள் குவிந்ததால் அவர் வீட்டில் வருவாய்துறை சோதனை நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு வாடகைக்கு காளைகளை வாங்க கூட பணம் இல்லாததால் தனது இரண்டு மகள்களின் உதவியால் நிலத்தை உழுதார். இதுகுறித்த வீடியோ  இணையதளங்களில் வைரல் ஆனது. 
 
இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட் அந்த விவசாயிக்கு உதவி செய்ய விரும்புவதாக கூறி, ஒரு புதிய டிராக்டரை வாங்கி அந்த விவசாயிக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த விவசாயி குடும்பத்தினர் நடிகர் சோனு சூட்க்கு நன்றி தெரிவித்தனர். 
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அந்த விவசாயியின் இரு மகள்களின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில் அனைவரின் உதவு பெரும் அளவுக்கு அந்த குடும்பம் ஏழையா என விவசாயி வீட்டில் ஆந்திர வருவாய்துறை சோதனை போட்டுள்ளனர். 
 
சோதனையில் உண்மையுலேயே அந்த குடுமம் வருமையால் வாடுகிறது என தெரிய வந்த பின்னர் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். இது குறித்து அந்த விவசாயி கடும் வேதனை தெரிவித்துள்ளார். சேவை செய்வதில் அரசியல் செய்வதா என ஜெகன் மோகன் அரசு மீது கண்டனங்கள் எழுந்துள்ளது.