1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஜூலை 2023 (21:00 IST)

விதவை பெண்ணின் முடியை வெட்டி, மரத்தில் கட்டி வைத்து அடித்த பெண்கள்

attcked
ராஜஸ்தான் மாநிலத்தில் விதவை பெண்ணின் ஆடைகளை கிழித்து , அவரை மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் டைலராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். அந்தப் பெண் தன் 5 வயது  மகனுடன் அந்தக் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அப்பெண்ணுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் தகாத இருப்பதாக அங்குள்ள பெண்களுக்கு சந்தெகம் எழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த அப்பெண்கள், டெய்லர் பணியாற்றும் பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை தாக்கி, தெருவில் உள்ள மரத்தில் கட்டி வைத்து, அவரது ஆடைகளை கிழித்ததுடன், அவரது தலைமுடியையும் வெட்டியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.