புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (07:35 IST)

கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்தா?

சமையல் காஸ் சிலிண்டருக்கு தற்போது மானியம் வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்த மானியம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியபோது 2022 ஆம் ஆண்டுக்கான பெட்ரோலிய மாநிலத்தை 12,995 கோடியாக நிதியமைச்சகம் குறைந்துள்ளதாகவும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்
 
கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்வுக்கு இதுதான் காரணம் என குறிப்பிட்ட அவர் விலை மேலும் உயரும் பட்சத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலும் நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். சமையல் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் தற்போது பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது