வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (16:39 IST)

மக்களை வேட்டையாடும் பாஜக - அதிமுக: உதயநிதி காட்டம்!

மக்களை வேட்டையாடும் பாஜக - அதிமுக: உதயநிதி காட்டம்!
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மாதம்தோறும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கூடுதலா ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் இதனை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், 15 நாட்களில் ரூ.100 விலை உயர்ந்துள்ளது சிலிண்டர். இந்த நெருக்கடியான காலத்திலும் மக்களின் அடிப்படை தேவைகளை நசுக்கும் பாசிச போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதும், அடிமைகள் அதை வேடிக்கை பார்ப்பதும் வேதனை தருகிறது. மக்களின் வலிக்கு மருந்திடாமல் விலையேற்றம், விரோத சட்டம் என வேட்டையாடுவதை கண்டிக்கிறோம் என் பதிவிட்டுள்ளார்.