காங்கிரஸ்-ன் தேர்தல் முக்கிய வாக்குறுதிகள்!
25 வயதிற்குட்பட்ட டிகிரி-டிப்ளமோ முத்தவர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, திமுக, சமாஜ்வாதி, ஆம் அத்மி, திரிணாமுல் உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2 முறை காங்கிரஸ் பாஜகவிடம் தோல்வியடைந்துள்ள நிலையில், இம்முறை வலுவான கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த திட்டமிட்டு பல மாநில கட்சிகளுடன் இணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று மக்களவை தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,'' 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பட்டும்.
25 வயதிற்குட்பட்ட டிகிரி-டிப்ளமோ முத்தவர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி வழங்கப்படும்.
வெளிப்படைத்தன்மையுடன் போட்டித்தேர்வுகள் நடத்தவும், வினாத்தாள் கசிவதை தடுக்கவும் உயர் தரத்திலான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வேலைச்சூழலை உறுதி செய்ய புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்'' என்று தெரிவித்துள்ளது.