உளவு பார்த்த விவகாரம்: நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் போராட்டம் !

Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 20 ஜூலை 2021 (10:23 IST)
உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த திட்டம்.

 
மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரின் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார்களில் உண்மையில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :