செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஜூலை 2021 (09:49 IST)

கொரோனா பயத்தால் வீட்டிலேயே முடக்கம்; கதவை உடைத்த போலீஸாருக்கு அதிர்ச்சி!

ஆந்திராவில் கொரோனா பீதியால் பயந்து வீட்டிற்குள் ஒன்ரறை வருடங்களாக முடங்கி கிடந்த குடும்பத்தை போலீஸார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ராஜோலு கிராமத்தை சேர்ந்த 35 வயதான விவசாயி ஒருவர் கடந்த ஒன்ரறை ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவ தொடங்கிய நிலையில் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் வீட்டுக்குள்ளேயே இருக்க தொடங்கியுள்ளார். குடும்பமே வீட்டை விட்டு வெளியேறாமல் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளனர். மகன் மட்டும் மாதம் ஒருமுறை ரேசன் பொருட்களை வாங்க வெளியே வந்துள்ளான்.

தொடர்ந்து இவர்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். கதவை உடைத்து சென்ற போலீஸார் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மெலிந்து கிடந்த குடும்பத்தினரை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.