ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (09:25 IST)

கடும் வெயிலால் பள்ளி திறக்கும் தேதியில் மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் அன்றைய தேதியிலேயே அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவடையும் நாள் நெருங்கிவிட்டாலும் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான வெயில் அடித்து வருகிறது. இதனால் பள்ளி திறக்கும் தேதியை ஒருவாரம் தள்ளிப்போட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கும் எண்ணம் பள்ளிக்கல்வித்துறைக்கு இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட கூறியுள்ளார். வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என வெளியான செய்திக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.