இந்தியாவை வென்றால் ? – பாகிஸ்தான் வீரர்களுக்கு வாரியம் சலுகை !

Last Modified திங்கள், 27 மே 2019 (09:17 IST)
உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவை வென்றால் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் குடும்பத்தை தங்களோடு தங்கவைத்துக் கொள்வது குறித்து பரிசீலிப்பதாக அந்நாட்டு வாரியம் கூறியுள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரானத் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியபோது அவர்கள் தங்கள் குடும்பத்தாரை உடன் தங்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அந்த தொடரில் மிக மோசமாக தோற்று ஏமாற்றமளித்தனர்.

இதையடுத்து உலகக்கோப்பைத் தொடரில் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பாகிஸ்தான் வீரர்களின் கோரிக்கை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. இந்நிலையில் வீரர்கள் தங்கள் குடும்பத்தாரை தங்கவைத்துக்கொள்வது ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்  விளையாடும் போட்டிகளுக்குப் பின் முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்தியாவுடனான போட்டியில் சிறப்பாக விளையாண்டு வெற்றி பெறும் பட்சத்தில் குடும்பங்களை தங்க வைத்துக்கொள்வது அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளது என செய்திகள் வெளியாகி வருகின்றன.இதில் மேலும் படிக்கவும் :