ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 மார்ச் 2023 (15:00 IST)

புதிய லுக்கில் ராகுல்காந்தி: கேம்பிரிஜ் பல்கலையில் உரை..!

rahulgandhi
புதிய லுக்கில் ராகுல்காந்தி: கேம்பிரிஜ் பல்கலையில் உரை..!
கடந்த சில மாதங்களாக தாடியுடன் இருந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது புதிய லுக்கில் கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். இந்திய தேசிய ஒற்றுமை பயணம் நடத்திய ராகுல் காந்தி அந்த பயணம் முடியும் வரை தாடியுடன் இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் தாடியை ட்ரீம் செய்து புதிய அட்டகாசமான லுக்கில் உள்ளார். இந்த புதிய லுக் உடன் அவர் தான் படித்த இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். இதற்காக அவர் லண்டன் சென்றுள்ளதாகவும் 21ஆம் நூற்றாண்டில் கேட்க கற்றுக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் அவர் உரையாற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மேலும் கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார் என்றும் இந்த பயணத்தின் போது இங்கிலாந்து மற்றும் இந்திய தொழிலதிபர்களை ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ராகுல் காந்தியின் இந்த புதிய லுக் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
Edited by Siva