லாட்ஜில் பிளஸ் 2 மாணவியை சீரழித்த அயோக்கியன்!!!

man
Last Updated: சனி, 13 ஏப்ரல் 2019 (09:49 IST)
கன்னியாகுமரியில் கட்டிட தொழிலாளி ஒருவன் பிளஸ்2 மாணவியை மயக்கி சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னியாகுமரியை சேர்ந்த ஜோஸ்ப்ளின் ராஜ்குமார்(22) என்பவன் கட்டிட வேலை செய்து வருகிறான். இவன் அதே பகுதியில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை மயக்கி தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.
 
தினமும் இருவரும் மணிக்கணக்கில் போன் பேசி வந்துள்ளனர். இருவரும் வெளியே சென்று சந்தோஷமாக வாழலாம், உன் வீட்டிலிருந்து நகை பணத்தை எடுத்து வா என ராஜ்குமார் அந்த மாணவியிடம் மூலைசளவை செய்துள்ளான். படித்த போதிலும் சற்றும் அறிவில்லாத அந்த மாணவி, வீட்டிலிருந்து நகை பணத்துடன் எஸ்கேப் ஆகியுள்ளார்.
 
ராஜ்குமார் அயோக்கியன் அந்த பெண்ணை கேரளாவிற்கு அழைத்து சென்று அங்கு லாட்ஜில் வைத்து மாணவியை சீரழித்துள்ளான். பின்னர் மாணவியிடம் இருந்த நகை, பணத்தை வாங்கி செலவு செய்து வந்துள்ளான்.
 
மகள் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் தனிப்படை அமைத்து கேரளாவில் இருந்த அவர்களை கண்டுபிடித்தனர். மாணவியை அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றனர். ராஜ்குமாரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ராஜ்குமாரை மாதிரி ஏராளமான அயோக்கியர்கள் பற்றி நாம் அன்றாடம் பார்க்கிறோம். தயவு செய்து பெண் பிள்ளைகள் பெற்றோரை தவிர யாரையும் நம்பாமல் இருப்பதே பாதுகாப்பு.


இதில் மேலும் படிக்கவும் :