வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (12:17 IST)

அண்ணியின் தங்கையை வீட்டிற்கு வரவழைத்து அரங்கேற்றிய வெறிச்செயல்!!! வாலிபர் கைது...

அண்ணியின் தங்கையை கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சென்னையை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் தனது அண்ணியின் தங்கையான அகிலா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. தஞ்சாவூரை சேர்ந்த அகிலா சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார்.
 
இருவரும் காதலித்து வந்த நிலையில் அகிலா திடீரென சந்தோஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அகிலாவை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தோஷ், அகிலாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
 
பின்னர் அகிலா கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. இதையடுத்து போலீஸார் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.